சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காஷிம்பூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 29) கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பின்னர் Transit Warrant பெறப்பட்டு, அவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூட்கேஸில் பெண்ணின் உடல் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ரெயில் எண் 12621-ல் ஆக்ராவை சென்றடைந்தபோது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதை பயணிகள் கவனித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அரசு ரெயில்வே போலீசார் சூட்கேஸை திறந்து சோதனை செய்தனர். அதில் தலை துண்டிக்கப்பட்டு, பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது.போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர் ஹயாத்துன் நிஷா (38) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. வாடகை வீட்டில் மேலும் உடல் பாகங்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
Advertisement
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு ஆணும் பெண்ணும் சூட்கேஸை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு பெரிய சமையல் பாத்திரம் ஒன்றில் பெண்ணின் உடலின் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக T8 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதலில் பெண் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.தலைமறைவாக இருந்த தம்பதி சிக்கினர்விசாரணையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலம் கேந்துஜார் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடத்தினர்.இந்த நிலையில், இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி, மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டம் காஷிம்பூர் பகுதியில் இருவரும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை Transit Warrant மூலம் தாம்பரத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, நிஷாவுடனான தொடர்பை பகாபதி மாஜி கண்டித்ததால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.