Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

கள ஆய்வு இல்லாமல் நாளை முதல் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு

கள ஆய்வு இல்லாமல் நாளை முதல் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறையில் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் அளிக்கும் ஜி.பி.எஸ். தகவல்கள் சரியாக இருந்தால், கள ஆய்வு மேற்கொள்ளாமலேயே விண்ணப்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.இதுதொடர்பாக அனைத்து தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மேற்பார்வை என்ஜினீயர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இணையதளம் வாயிலாக மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, தேவையான ஆவணங்களுடன் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டிய இடத்தின் ஜி.பி.எஸ். இருப்பிட தகவலையும் விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாக பெறக்கூடாது.விண்ணப்பதாரர் பதிவு செய்யும் ஜி.பி.எஸ். தகவல்கள், புவியிட அமைப்பு வரைபடங்களுக்கான ஜி.ஐ.எஸ். செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் துல்லியமாக இருந்தால், நேரடியாக கள ஆய்வு நடத்தாமல் விண்ணப்பம் அடுத்தகட்ட செயல்முறைக்கு அனுப்பப்படும்.ஒருவேளை ஜி.பி.எஸ்.
Advertisement
சரிபார்ப்பு வெற்றியடையவில்லை என்றால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கள ஆய்வு மேற்கொள்ளப்படும். ஜி.பி.எஸ். சரிபார்ப்பு முடிந்த பிறகு மதிப்பீடு செய்யப்படும். மின் இணைப்பு வழங்கும்போது, மீட்டர் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜி.பி.எஸ். தகவலும் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். அதன்பிறகு மீட்டர் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும்.மேலும், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.இந்த புதிய நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புதிய மின் இணைப்பு விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு