Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் தவறு செய்துவிட்டனர்; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்-அமைச்சராக விஜய் பதவி வகித்து வருகிறார்.இந்த தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் தோல்வியடைந்தார்.இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:ஒரு காலத்தில் ஒரு குடும்பத்தில் படித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இருப்பது அரிதாக இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு ஊரிலும், கிராமத்திலும் பட்டதாரிகளும், டாக்டர்களும் இருக்கின்றனர்.
Advertisement
இதற்கு திராவிட இயக்கங்களின் பங்களிப்பே முக்கிய காரணம். இந்த முன்னேற்றத்துக்கு யார் காரணம் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு இதுகுறித்த புரிதலும், தகவலும் இல்லை.தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தற்போது ஏமாற்றமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும்.மேலும், மணமக்கள் தங்களது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு