பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த முதியவர் பலி...
மராட்டிய மாநிலம் மும்பையின் சாக்கிநாகா பகுதியில் திறந்த நிலையில் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
மழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த நீரில் குழி தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு முதியவரின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.