தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டம்: சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி
தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நீண்டநாள் உண்ணாவிரதம் காரணமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.21-வது நாளாக உண்ணாவிரதத்தில் இருந்த அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் இருந்து போலீசார் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் சுயநினைவுடன் இருப்பதுடன், உடல் செயல்பாடுகள் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து டெல்லி போலீசார் வெளியிட்ட தகவலில், உடல்நல பாதுகாப்பை முன்னிட்டு மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.