Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

திருமணத்தை மீறிய உறவு; பிரியாணி அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு

திருமணத்தை மீறிய உறவு; பிரியாணி அபிராமிக்கு ஜாமீன் மறுப்பு

கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த வழக்கில், பிரியாணி அபிராமிக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வந்த அபிராமிக்கு, அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதுகுறித்து அறிந்த விஜய், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்த அபிராமி, அதற்கு தடையாக இருந்த கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு, கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.இதில் விஜய் உயிர் தப்பிய நிலையில், அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

Advertisement
இதுகுறித்து விஜய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை தேடினர். மீனாட்சி சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்றபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அபிராமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்துக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அபிராமி மேல்முறையீடு செய்தார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழலில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடிய வழக்கு இதுவல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து அபிராமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், பிரதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு