Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

கொப்பரை தேங்காய் விலை உயராததால் தென்னை விவசாயிகள் கவலை

கொப்பரை தேங்காய் விலை உயராததால் தென்னை விவசாயிகள் கவலை

தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையிலும், அதன் விலையும் கொப்பரை தேங்காய் விலையும் எதிர்பார்த்த அளவுக்கு உயராததால் தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கோடை மற்றும் பருவமழை போதுமான அளவு கிடைத்தால் தென்னை மரங்கள் நன்றாக வளர்ந்து பூப்பிடிக்கும். இதனால் ஜனவரி முதல் மே மாதம் வரை தேங்காய் சீசன் சிறப்பாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்ததுடன், இந்த ஆண்டு மழையே இல்லாததால் தேங்காய் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று ஒரு கிலோ தேங்காய் ரூ.50.19 முதல் ரூ.53.63 வரை விற்பனையானது.

Advertisement
அதேபோல், கடந்த 3-ம் தேதி பெருந்துறை விற்பனைக்கூடத்தில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.143.01 முதல் ரூ.155.19 வரை விலை போனது. இந்த ஆண்டு கொப்பரை தேங்காய் விலை அதிகபட்சமாக ரூ.180-ஐ தாண்டவில்லை. அடுத்த ஜனவரி மாத சீசனுக்கான குரும்பை கடந்த மாதமே பிடித்து, சுமார் 5 மாதங்களில் காய் முதிர்ந்து பலன் தர வேண்டும். ஆனால் கடும் வெயில் காரணமாக பல தென்னை மரங்களில் குரும்பை பிடிக்கவில்லை. ஏற்கனவே பிடித்த குரும்பைகளிலும் பூக்கள் உதிர்ந்து வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சுதந்திரராசு தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு