Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்

சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஜூலியன் கேஷ்–லாயிட் கிளாஸ்பூல் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ்–டேவிட் பெல் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
இதன் மூலம் ஜூலியன் கேஷ்–லாயிட் கிளாஸ்பூல் ஜோடி சீனா ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. மேலும், சீனா ஓபன் டென்னிஸ் வரலாற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பிரிட்டிஷ் ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு