திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.72 கோடி...
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ.4.72 கோடியை எட்டியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்ட தினசரி தகவலின்படி, அந்த நாளில் சுமார் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரிசன நேரம் மற்றும் கோவில் வளாகங்களில் கூட்ட நெரிசலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி மற்றும் சிறப்பு நாட்களை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.