Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல்காணிக்கை ரூ.4.08 கோடி

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல்காணிக்கை ரூ.4.08 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில், நேற்று முன்தினம் திருப்பதி கோவிலில் மொத்தம் 84,176 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Advertisement
மேலும், 36,673 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையின் மதிப்பு ரூ.4 கோடியே 8 லட்சம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு