திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல்காணிக்கை ரூ.4.08 கோடி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல்காணிக்கை ரூ.4.08 கோடி

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல்காணிக்கை ரூ.4.08 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவர்கள் ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில், நேற்று முன்தினம் திருப்பதி கோவிலில் மொத்தம் 84,176 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 36,673 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையின் மதிப்பு ரூ.4 கோடியே 8 லட்சம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.