Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. - மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம்

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் த.வெ.க. - மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. தொடர்ந்து வலுவாக இருந்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு சவால் அளித்து, உள்ளாட்சி அமைப்புகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த த.வெ.க. தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய பதவிக்காலம் மார்ச் மாதம் வரை இருக்கும் நிலையில், மாநகராட்சிகளை மட்டும் அதற்கு முன்பாகவே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு, தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர்வெளியாகலாம்எனஎதிர்பார்க்கப்படுகிறது.மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து அவற்றை த.வெ.க.

Advertisement
அரசின் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரவும்,அதன்பின்னரஆறுமாதங்களுக்குள்உள்ளாட்சிதேர்தலைநடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.இதுகுறித்து த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: மாநகராட்சிமற்றும்நகராட்சி நிர்வாகங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் புகார்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தயாராகி வருகிறது. இதன் காரணமாகவே நகராட்சி துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விவகாரம் குறித்து த.வெ.க.வின் மூத்த அமைச்சர்கள், முதல்-அமைச்சர் விஜய்யிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக இறுதி முடிவை முதல்-அமைச்சரே எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு