Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 3-ம் தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அன்றைய தினம் ஒரு சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ரூ.1,13,920 ஆகவும், ஒரு கிராம் ரூ.290 உயர்ந்து ரூ.14,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து 4-ம் தேதியும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும் விற்பனையானது.இதன் பின்னர் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,530 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
விடுமுறை தினம் காரணமாக நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கு விற்பனையாகிறது.இதற்கிடையே, வெள்ளியின் விலையில் தொடர்ந்து 5-வது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு