செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐ.வி.எப். (IVF) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தேசிய ஆர்ட் மற்றும் வாடகைத்தாய் பதிவகத்தின் தரவுகளின்படி, 7,803 மையங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன. அவற்றில 4,268 மையங்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சை மையங்கள் மற்றும் விந்தணு வங்கிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, **அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட** கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் விந்தணு வங்கிகளுக்கு மட்டுமே IVF சிகிச்சைக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பதிவு செய்யப்படாத மையங்கள் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை பெற முடியாத நிலை உருவாகும்.
நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், சிகிச்சை தரத்தை மேம்படுத்தல் மற்றும் சட்டவிரோத அல்லது தரமற்ற செயல்பாடுகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப (ART) சட்டம் மற்றும் வாடகைத் தாய்மை தொடர்பான விதிமுறைகளை அனைத்து மையங்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் செயற்கை கருத்தரிப்பு சேவைகளில் வெளிப்படைத்தன்மை, தரநிலை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.