சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்

சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஜூலியன் கேஷ்–லாயிட் கிளாஸ்பூல் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ்–டேவிட் பெல் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜூலியன் கேஷ்–லாயிட் கிளாஸ்பூல் ஜோடி சீனா ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. மேலும், சீனா ஓபன் டென்னிஸ் வரலாற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பிரிட்டிஷ் ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.