Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஏமனில் ஹவுதி ஏவுகணை தாக்குதல்: 30 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

ஏமனில் ஹவுதி ஏவுகணை தாக்குதல்: 30 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு
ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் அரசுத் தரப்புக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பல்வேறு வகையான உதவிகளையும், ஆயுத ஆதரவையும் வழங்கி வருகிறது.ஏமனின் சில பகுதிகள் தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் காரணமாக, ஏமன் மறைமுக மோதலின் முக்கிய தளமாக இருந்து வருகிறது.அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்த காலகட்டத்தில், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, சவுதி தரப்பும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.இந்த நிலையில், ஏமனில் அரசுப் படைகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
Advertisement
ஹட்ரமொட் மற்றும் மரிப் நகரங்களில் அமைந்திருந்த ராணுவ முகாம்கள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அரசுப் படையைச் சேர்ந்த 30 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு