Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

ஈரோடு அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை; விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர்

ஈரோடு அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானை; விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர்

ஈரோடு அருகே கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை ஒற்றை யானை வழிமறித்த நிலையில், அதனை அச்சமின்றி எதிர்கொண்ட ஓட்டுநர் பாசத்துடன் பேசியதுடன், விநாயகர் சதுர்த்தி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் நடமாடுவது அவ்வப்போது நிகழ்கிறது. குறிப்பாக, சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை நோக்கி சில யானைகள் சாலைக்கு வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக கரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பார்த்ததும், வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை சாலைக்கு வந்தது. பின்னர் லாரியின் குறுக்கே நின்றதால், ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக நிறுத்தினார்.

Advertisement
யானையை பார்த்து பதற்றமடையாத ஓட்டுநர், அதனிடம் பாசத்துடன் பேசினார். “நாளைக்கு உனக்கு பிறந்தநாளு... ஒரு கத்தை கரும்பு எடுத்துக்கோ” எனக் கூறிய அவர், விநாயகரின் மறு உருவமாக கருதப்படும் யானைக்கு முன்கூட்டியே விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார். ஓட்டுநரின் குரலைக் கேட்டதும் அமைதியான யானை, லாரிக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல், அதில் இருந்த ஒரு கத்தை கரும்பை தனது தும்பிக்கையால் எடுத்துக்கொண்டது. பின்னர் லாரிக்கு வழிவிட்டு சாலையோரமாக நகர்ந்த யானை, தான் எடுத்துச் சென்ற கரும்புகளை சாப்பிடத் தொடங்கியது. யானையிடம் ஓட்டுநர் பாசத்துடன் பேசிய இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு