தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை வெளியிட்ட விளக்கம் என்ன
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக சிறைத்துறை விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. கைதிகள் தப்பிய விதம், மீண்டும் பிடிக்கப்பட்டவர்கள், எஞ்சிய கைதிகளைத் தேடும் நடவடிக்கை மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 200 பேர் தங்கும் சிறையில் 334 கைதிகள் சிறைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தேனி மாவட்டச் சிறைச்சாலை கடந்த 2019 ஜனவரி 10-ம் தேதி முதல் தேக்கம்பட்டியில் இயங்கி வருகிறது. இச்சிறையில் ஒரே நேரத்தில் 200 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க அனுமதி உள்ள நிலையில், 2026 அக்டோபர் 26-ம் தேதி மொத்தம் 334 கைதிகள் இருந்துள்ளனர். காவலர்களைத் தாக்கி தப்பிய கைதிகள் சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில், சிறையின் மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபு, அந்தக் கைதியின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த கைதிகள் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்ததுடன், சிறையிலிருந்து தப்பிக்கவும் முயன்றுள்ளனர். பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டனர். எனினும், கைதிகள் காவலர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த சாவிகளைப் பறித்துள்ளனர். பின்னர் பிரதான நுழைவாயிலைத் திறந்து வெளியேறியுள்ளனர். 5 கைதிகள் மீண்டும் பிடிபட்டனர் தப்பியோடிய கைதிகளில் பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் மற்றும் லிங்கபிரசாத் ஆகிய ஐந்து பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாகச் சிறைத்துறை தெரிவித்துள்ளது.