Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்: எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்

சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்: எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதன் மூலம் இதுவரை 13 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு கைதிகள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து சிறைக் காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து சிறைக் காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின் பேரில், தேக்கம்பட்டி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பிய கைதிகளை பிடிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், தேனி மாவட்ட சிறைச்சாலையை சுற்றியுள்ள சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரையிலான பகுதிகளை போலீசார் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisement
முதற்கட்டமாக பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்கபிரசாத் ஆகிய 5 கைதிகள் பிடிபட்டனர். இதையடுத்து தப்பியிருந்த மற்ற 12 பேரையும் கைது செய்ய போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இந்த நிலையில், சிறையின் பின்புறம் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த மேலும் 8 கைதிகளை டிரோன்களின் உதவியுடன் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். எஞ்சியுள்ள 4 கைதிகளை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறையில் விசாரணையை முடித்துவிட்டு புறப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறையினரும் சிறைத்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீதமுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், கைதிகள் பிடிபடுவது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தேனி மாவட்ட சிறைச்சாலையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு