Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் : டெண்டர் கோரிய ரிசர்வ் வங்கி

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் : டெண்டர் கோரிய ரிசர்வ் வங்கி
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக தொடங்கியுள்ளது.சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு காகித நோட்டுகள் விரைவில் கிழிந்துவிடுவதால், அதற்கு மாற்றாக பிரத்யேக பாலிமர் தாள்களை சப்ளை செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள சர்வதேச நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக குறிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதிக அளவில் மக்களிடம் புழங்குவதால் விரைவில் சேதமடையும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளைத்தான் முதற்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றி சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது உங்களிடம் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல் போகாது. காகித நோட்டுகளும், பிளாஸ்டிக் நோட்டுகளும் சந்தையில் சமமாகவே புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு