இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள விக்ரம்-1ராக்கெட், இன்று (சனிக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.'ஆகமன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முதல் ஏவுதல் திட்டம், இந்திய தனியார் விண்வெளித் துறைக்கு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.ஏவுதலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்றும், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.