Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

“ராமாயணா” பட பாடலில் சூஃபி இசை.. விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் பதில்

“ராமாயணா” பட பாடலில் சூஃபி இசை.. விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் பதில்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். அமேசான் மியூசிக் சார்பில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி சென்னையில் ‘ராமாயணா’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெளியான ‘ஜெய் ஜெய் ராம்’ மற்றும் ‘ராவண தாண்டவம்’ பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாடலான ‘மங்கள வண்ணமே’ வெளியாகியுள்ளது. இந்த பாடல் இந்தியில் ‘மங்கள் ரங்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். ராமர் - சீதையின் தெய்வீக பந்தத்தையும், இருவரின் இணைந்த பயணத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைந்துள்ளது. இந்நிலையில், பாடலின் ஒரு பகுதியில் ரகுமான் சூஃபி இசை மரபில் இடம்பெறும் கவ்வாலி இசை வடிவத்தை பயன்படுத்தியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் சூஃபி இசையை பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வணிக நோக்கத்திற்காக வரலாற்றை தவறாக சித்தரிப்பது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏ.ஆர். ரகுமானிடமும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சூஃபி இசை என்பது இஸ்லாமிய மரபில் உருவான சூஃபி மெய்யியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இசை வடிவமாகும். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளைவிட தனது படைப்பில் வெளிப்படும் நேர்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஒரு பாடலை உருவாக்குவதற்கு தாங்கள் அதிக உழைப்பை மேற்கொள்வதாகவும், பல விஷயங்களைச் சேர்த்து, மாற்றி, பல்வேறு யோசனைகளுக்குப் பிறகே பாடலை இறுதி செய்வதாகவும் தெரிவித்தார். அந்த செயல்முறை நிறைவடைந்த பிறகு வெளியாகும் கருத்துகளைப் பார்ப்பதற்குக்கூட சில நேரங்களில் தங்களுக்கு பொறுமை இருப்பதில்லை என்றும் கூறினார். மேலும், சில சமயங்களில் தனது மகன் வந்து, முந்தைய நாள் யாரோ ஒருவர் தெரிவித்த கருத்தை தன்னிடம் கூறுவதாகவும், தான் தனது பணியை நேர்மையாக செய்திருப்பதாகவும், அதனை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரகுமான் தெரிவித்தார். தனது மூன்று தசாப்த கால திரைப்பயணத்தில், ராமாயணம் போன்ற மிகச் சிறப்பான கதைக்கு பல மொழிகளில் இசையமைப்பது தனக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் பொறுப்புணர்வையும் அளிப்பதாக ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு