Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்! – ரவி மோகன்

தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்! – ரவி மோகன்

உடலுக்கும் மனதுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். விளம்பர வாய்ப்புகளைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் ரவி மோகன், ‘ஜெயம்’, ‘தனி ஒருவன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவர், தனது நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது ‘கராத்தே பாபு’, ‘பென்ஸ்’, ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவி மோகன், விளம்பரங்களில் நடிப்பது குறித்த தனது அணுகுமுறையைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisement
பல்வேறு நிறுவனங்கள் தங்களை விளம்பரத் தூதராக நியமிக்க விரும்பி அணுகுவதாகக் குறிப்பிட்ட அவர், வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதில்லை என்றும், விளம்பரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவான முடிவுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறேன். எனது தனிப்பட்ட உறவுகளையும் விளம்பர வாய்ப்புகளையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்கிறேன்” என்று கூறினார். பல விளம்பர வாய்ப்புகள் வந்தாலும், அவற்றின் தன்மையை ஆராய்ந்த பின்னரே முடிவெடுப்பதாக ரவி மோகன் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு