Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

முதல்-அமைச்சர் விஜய் முதன் முறையாக வெளிநாடு பயணம்; இன்று இரவு லண்டனுக்கு புறப்படுகிறார்

முதல்-அமைச்சர் விஜய் முதன் முறையாக வெளிநாடு பயணம்; இன்று இரவு லண்டனுக்கு புறப்படுகிறார்

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று (வியாழக்கிழமை) இரவு சென்னையில் இருந்து அவர் லண்டன் புறப்படுகிறார். தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதை த.வெ.க. அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் தென்கொரியா சென்றார். அங்கு கார் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு 13-ந் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 110-க்கும் மேற்பட்ட நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதுடன், 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு லண்டன் செல்கிறது.

Advertisement
இதன்படி, இன்று இரவு சுமார் 10 மணியளவில் சென்னையில் இருந்து விஜய் புறப்படுகிறார். துபாய் வழியாக லண்டன் செல்லும் அவர், செப்டம்பர் 16-ந் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர் செப்டம்பர் 17-ந் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார். லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் இந்தப் பயணத்தில் பங்கேற்கிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம் இதுவாகும். சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர் தயாராகியுள்ளார். சென்னை விமான நிலையத்திலும் இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களை விட அதிக முதலீடுகளை ஈர்ப்பதே தொழில்துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் முக்கிய அம்சமாக இருப்பதால், புதிய முதலீடுகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு