Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

சிறுமி கொலை வழக்கில் விடுதலையான தஷ்வந்த்: தீர்ப்பை சீராய்வு செய்ய தமிழக அரசு மனு

சிறுமி கொலை வழக்கில் விடுதலையான தஷ்வந்த்: தீர்ப்பை சீராய்வு செய்ய தமிழக அரசு மனு

சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தனது தாயை தாக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதன்பின்னர் போலீசார் மேற்கொண்ட பல்வேறு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Advertisement
சிறுமி கொலை வழக்கில் அவருக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்தது. இதற்கு முன்பாக, அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருந்தார். தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பா. கருணாகரன், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு