Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

‘சேயோன்’ படப்பிடிப்பில் நடிகர் சீமான்.. வைரலாகும் புகைப்படங்கள்

‘சேயோன்’ படப்பிடிப்பில் நடிகர் சீமான்.. வைரலாகும் புகைப்படங்கள்

‘தாய்க்கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன், அடுத்ததாக ‘சேயோன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீமான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ‘எல்.ஐ.கே.’ படத்துக்குப் பிறகு சீமான் நடிக்கும் திரைப்படம் ‘சேயோன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மதுரை மண்ணின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, கிராமத்து பின்னணியில் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. தற்போது மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, முக்கியமான ஆக்‌ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ‘சேயோன்’ படப்பிடிப்பில் சீமான் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இப்படத்தில் சீமான், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு