Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்சாரம் இருந்தபோதிலும் நிலவும் மின்னழுத்தக் குறைபாடு காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும் voltage பிரச்சினை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

Advertisement
ஆனால், மின்துறை அமைச்சரோ இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தேவையற்ற அவதூறுகளைப் பேசி வருகிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே முறையாக நிறைவேற்ற முடியாமல் திணறும் ‘ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு, திசைதிருப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு