Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

பெண் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்... ஆனால் தனிப்பட்ட தாக்குதல் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

பெண் அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்... ஆனால் தனிப்பட்ட தாக்குதல் கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பெண் அமைச்சரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து அவமதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ட்ரோல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், அவை ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தன்மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு விளக்கம் அளிக்கவும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் ஒரு பெண் அமைச்சர் தனது முக்கியமான நேரத்தை செலவிட வேண்டிய சூழல் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற ட்ரோல்கள் பெண்களின் மன அமைதி, தன்னம்பிக்கை மற்றும் கவனத்தை பாதிப்பதுடன், மக்களுக்காக பணியாற்ற வேண்டிய நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கச் செய்யும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.மேலும், தான் பாஜகவின் கொள்கையிலும் கட்சியிலும் உறுதியாக நிற்கும் பெண் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்ணின் கண்ணியத்துக்காக குரல் கொடுத்ததற்காக தன்னை “ஏ டீம்”, “பி டீம்” என விமர்சித்து ட்ரோல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.தானும் இதுபோன்ற ட்ரோல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்த வார்த்தைகள் ஒரு பெண்ணின் மனதில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அனுபவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
எனினும், அதனால் தான் ஒருபோதும் தளரவில்லை என்றும், தொடர்ந்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.பெண் அரசியல்வாதியின் செயல்பாடுகளை எதிர்க்க விரும்புவோர், அவரது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். கருத்துகளுக்கு தரவுகள் மற்றும் வலுவான வாதங்கள் மூலம் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியலை அரசியலாலும், கருத்தை கருத்தாலும், உண்மையை உண்மையாலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஆனால், ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை மட்டும் காயப்படுத்தக் கூடாது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். எத்தனை ட்ரோல்கள் வந்தாலும் பெண்கள் அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டார்கள் என்றும், உறுதியுடன் நின்று மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை பெண் தலைவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு