Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்...

தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்...

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தகவலின்படி, அருகிலிருந்த குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக குடியிருப்பு பகுதிக்குப் பரவி வீடுகளை சூழ்ந்தது. தீயில் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

Advertisement
ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பல வாகனங்களுடன் விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு