Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

8 நாட்களில் ரூ.80 கோடி வசூல் செய்த சூரியின் “மண்டாடி

8 நாட்களில் ரூ.80 கோடி வசூல் செய்த சூரியின் “மண்டாடி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் உலகம் முழுவதும் 8 நாட்களில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமான சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றன. இந்நிலையில், மதிமாறன் இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியைச் சுற்றி நகர்கிறது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கூடுதல் திரைகள் ‘மண்டாடி’ படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து, திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் உலகளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டும் படமாக ‘மண்டாடி’ அமையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு