தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 18 முதல் 22-ந்தேதி வரை டாவோஸில் மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-கிளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 18 முதல் 22-ந்தேதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார். உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசு பிரதிநிதிகள், 1,000-க்கும் அதிகமான முன்னணி சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் பங்கேற்க உள்ளனர். முதலீடு, பொருளாதாரம் குறித்து ஆலோசனை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் இந்த மாநாட்டில், பொருளாதாரம், முதலீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். சர்வதேச அளவில் நிலவும் பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான ஆலோசனைகளும் இடம்பெறும். இந்தக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பதன் மூலம் தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழல் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சர்வதேச கவனம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் கொள்கை விவாதங்களில் அரசியல் தலைமைக்கு முக்கியத்துவம் டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் நேரடியாகக் கலந்துகொள்வது, தமிழக அரசின் முதலீடு மற்றும் தொழில் கொள்கை சார்ந்த அணுகுமுறையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.