Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சில்க் ஸ்மிதாவை வென்ற எஸ்.வி. சேகர்: இணையத்தில் வைரலாகும் பழைய போட்டியின் பின்னணி

சில்க் ஸ்மிதாவை வென்ற எஸ்.வி. சேகர்: இணையத்தில் வைரலாகும் பழைய போட்டியின் பின்னணி
சில்க் ஸ்மிதாவுடன் நடந்த ஒரு சுவாரஸ்யமான போட்டி குறித்த நினைவுகளை நடிகரும், முன்னாள் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில்க் ஸ்மிதாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த எஸ்.வி. சேகர், சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாகவும், போட்டிக்கான பரிசுத் தொகையை சில்க் ஸ்மிதா நேர்மையாக வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்தப் பதிவு பலரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. எந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்றார் என்ற கேள்விக்கான விளக்கத்தையும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அதன்படி, துபாயில் நடிகைகள் மோகினி மற்றும் ரோகினியுடன் தனித்தனியாக எடுத்த புகைப்படங்களை பார்த்த சில்க் ஸ்மிதா, எஸ்.வி.
Advertisement
சேகரின் சிரிப்பு இயல்பாக இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது.இதையடுத்து, இருவரும் இணைந்து சிரிக்கும் வகையில் ஒரு புகைப்படம் எடுத்து, யாருடைய சிரிப்பு மிகவும் இயல்பாக உள்ளது என்பதை வாசகர்கள் தேர்வு செய்யும் வகையில் போட்டி நடத்தலாம் என்று எஸ்.வி. சேகர் யோசனை தெரிவித்ததாக கூறியுள்ளார். அதில் சில்க் ஸ்மிதாவும் சம்மதம் தெரிவித்தார்.பின்னர், ஒரு வார இதழ் இந்தப் போட்டியை நடத்தியது. அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, யாருடைய சிரிப்பு இயல்பானது என்பதை வாசகர்கள் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.250 பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்தப் போட்டியில் எஸ்.வி. சேகர் வெற்றி பெற்றதுடன், ஒப்புக்கொண்டபடி பரிசுத் தொகையை சில்க் ஸ்மிதா வழங்கியதாகவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு