Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

சென்னை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..! திட்டம் தொடங்கி வைப்பு

சென்னை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..! திட்டம் தொடங்கி வைப்பு

சென்னை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை இன்று (28.09.2026) மதுரையில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் ரா. குமார் ஆகியோர் கலந்து கொண்டு, 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதேபோல், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அமைச்சர் ராஜ்மோகன், ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் தங்க மோதிரங்களை வழங்கினர் 6,548 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் சென்னையில் கடந்த 22.06.2026 முதல் 26.09.2026 வரை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்த மொத்தம் 6,548 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தினமும் 200 முதல் 300 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டு, இந்தப் பணிகள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோதிரம் பெறுவதற்கான அழைப்பிதழ் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் மருத்துவமனையில் வைத்து தங்க மோதிரம் வழங்கப்படும்.

Advertisement
எந்த மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது? திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திரு.வி.க. நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை, ஈஷா திருவொற்றியூர் அரசு மருத்துவமனை, அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மாதவரம் துணை மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும், மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது இனி மருத்துவமனையை விட்டு செல்லும்போதே மோதிரம் 27.09.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த பின்னர் தாய் மற்றும் குழந்தை வீட்டிற்கு புறப்படும் நேரத்திலேயே தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் குழந்தைப் பிறப்பை கொண்டாடுவதும், அரசு சுகாதார நிலையங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதும், அங்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு அரசின் அக்கறை மற்றும் நலத்திட்ட ஆதரவை வெளிப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இத்திட்டத்திற்காக 4 மையங்கள் (Hubs), 19 பிரசவ மையக் கிளைகள் (Spokes) செயல்பட்டு வருகின்றன. திட்டத்தின் கீழ் PICME பதிவு, வசிப்பிடச் சரிபார்ப்பு, செயல்முறை ஆணை உருவாக்குதல், மையங்களில் இருந்து கிளைகளுக்கு மோதிரங்களை அனுப்புதல், தாய்மை APP-ல் புகைப்படம் பதிவு செய்தல், தாயிடம் மோதிரத்தை வழங்கி பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை பெறுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இணையதளம் மற்றும் பதிவேட்டில் தினசரி இருப்பு விவரங்களும் பராமரிக்கப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு 94451 94916 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு