Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

குமரியில் ஒரே வாரத்தில் 107 பேர் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன?

குமரியில் ஒரே வாரத்தில் 107 பேர் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதையும், விபத்துகளை குறைத்து விபத்தில்லா குமரியை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நேற்று நடைபெற்ற வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனசோதனைகளில், மது போதையில் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 107 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும், விதிமுறைகளை மீறி கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 34 டாரஸ் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு