Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

சென்னை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சென்னை: கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சென்னையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சிவசக்தி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த நித்யராஜின் மகன் டேமியன் சுனில் (19). திருவொற்றியூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று சுனில் பலகைத்தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளார்.

Advertisement
அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய அவர், கடலில் மாயமானார். இதையடுத்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று கடற்கரையில் சுனிலின் உடல் ஒதுங்கிக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு