Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

‘சிவகார்த்திகேயனுடன் எந்த மனக்கசப்பும் இல்லை’ - வெங்கட் பிரபு விளக்கம்

‘சிவகார்த்திகேயனுடன் எந்த மனக்கசப்பும் இல்லை’ - வெங்கட் பிரபு விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள எஸ்.கே.27 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் 27-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே, 2024-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் தாமதமாவது குறித்து அவரது தந்தையும் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான கங்கை அமரன் சமீபத்தில் பேசியிருந்தார். வெங்கட் பிரபு ஒரு நடிகரை மனதில் வைத்து கதையை உருவாக்கி, படத்தின் முன் தயாரிப்புப் பணிகளுக்காக அமெரிக்கா வரை சென்றதாகவும், அந்த நடிகர் வேறொரு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே இயக்குநருடன் தொடர்ந்து படங்கள் செய்ய முடிவு செய்ததால் வெங்கட் பிரபுவின் படம் தாமதமானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கங்கை அமரனின் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் குறிப்பிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற விவாதமும் உருவானது.

Advertisement
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிவகார்த்திகேயன் தனக்கு எப்போதும் அன்பான நண்பராகவும் சகோதரராகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது பல்வேறு யூகங்களும் சர்ச்சைகளும் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, ஒரு தந்தையாக தனது மகனின் திரைப்படம் தாமதமாகும்போது கங்கை அமரனுக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பானதே என்றும், இந்த விவகாரத்தின் முழுமையான பின்னணி அவருக்கு தெரியாமல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது தொழில்முறை விஷயங்களை தந்தை உட்பட யாரிடமும் விரிவாக விவாதிக்கும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படத் திட்டம் தள்ளிப்போனதே தவிர, சிவகார்த்திகேயனுடன் எந்தவித மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்காலத்தில் சரியான நேரம் அமையும் பட்சத்தில், நல்ல கதையுடன் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். எனவே, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், தான் தனது அடுத்த பணியில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படம் வெற்றி பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு