குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்...
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, குஜராத் மாநிலம் வல்சாத் (Valsad) நகரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் (எண்: 09030) ஜூலை 14-ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு வல்சாத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 10.00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து தஹானு ரோடு நோக்கி சிறப்பு ரெயில் (எண்: 09029) ஜூலை 17-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.50 மணிக்கு சென்றடையும்.