குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்...
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Jul 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Jul 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்...

குஜராத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்...

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, குஜராத் மாநிலம் வல்சாத் (Valsad) நகரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில் (எண்: 09030) ஜூலை 14-ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு வல்சாத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 10.00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து தஹானு ரோடு நோக்கி சிறப்பு ரெயில் (எண்: 09029) ஜூலை 17-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.50 மணிக்கு சென்றடையும். 22 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநள்ளாறு, மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட் மற்றும் காட்பாடி உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஜூலை 11-ஆம் தேதி காலை 8.00 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.