Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளருக்கு முத்தப் பரிசளித்த சிறுமி

இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளருக்கு முத்தப் பரிசளித்த சிறுமி

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு சிறுமி ஒருவர் அன்புடன் முத்தமிட்ட சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ உள்ளிட்ட பிரபலமான இண்டி பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் மண்ணஞ்சேரியில் உள்ள கானக்கூர் ஸ்ரீ தன்வந்திரி மகாக்ஷேத்திரத்தில் நடைபெற்ற சிறப்புத் திருவிழா மற்றும் தன்வந்திரி மகா யாக நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஆன்மீக மற்றும் இசை நிகழ்ச்சியில், தனது தந்தையும் பிரபல பின்னணிப் பாடகருமான திப்புவுடன் சாய் அபயங்கர் கலந்து கொண்டார். பாரம்பரிய உடையில் மேடைக்கு வந்த அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

Advertisement
அப்போது சாய் அபயங்கரைச் சந்தித்து ஆட்டோகிராப் பெறுவதற்காக ஒரு சிறுமி மேடைக்கு வந்தார். சிறுமியை அருகில் அழைத்த அவர், அன்புடன் ஆட்டோகிராப் வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுமி, தனக்குப் பிடித்த இசையமைப்பாளரின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். சிறுமியின் இந்த எதிர்பாராத அன்பு வெளிப்பாடு அங்கிருந்த ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அருகில் இருந்த தந்தை திப்புவும், தனது மகனுக்குக் கேரள ரசிகர்கள் அளிக்கும் அன்பைக் கண்டு புன்னகைத்தார். சாய் அபயங்கரும் சிறுமியும் சந்தித்துக்கொண்ட இந்த அழகான தருணத்தின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு