அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்களை மூன்று கட்டங்களாக நியமிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வரவேற்றுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவிப் பேராசிரியர் பணியிடங்களைவிரைந்துநிரப்பவேண்டும்எனவலியுறுத்தியுள்ளார்.மேலும், அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த முடிவையும் சி.பி.ஐ. வரவேற்றுள்ளது.அதேவேளையில், ரூ.5 ஆயிரம் மட்டுமே உயர்த்தப்படுவது தற்போதைய வாழ்க்கைச் சூழலில் போதுமானதாக இருக்காது என்பதால், ஊதிய உயர்வை மேலும் அதிகரிக்க வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்த உயர்வு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டில் 7 முதல் 8 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாத திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டு முதல் ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.