விஜய்காந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்: முதல்-அமைச்சர் விஜய்
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த விஜயகாந்தை நினைவுகூர்ந்துள்ளார்.திரைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கிய விஜயகாந்த், அரசியலிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய தலைவராக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை மற்றும் எளிய மக்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டு, தன்னால் இயன்ற உதவிகளை தாராள மனதுடன் வழங்கியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்காக சேவையாற்றிய புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.