Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

வருமானத்தை மீறி ரூ.1.28 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக எஸ்.பி. செந்தில்குமார் மீது வழக்கு

வருமானத்தை மீறி ரூ.1.28 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக எஸ்.பி. செந்தில்குமார் மீது வழக்கு
பாலியல் தொல்லை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு காவல் படை கமாண்டன்ட் மற்றும் எஸ்.பி. தரத்தில் பணியாற்றிய செந்தில்குமார், தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழக காவல்துறையில் எஸ்.பி. பதவியில் பணியாற்றிய அவர், கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2023 முதல் அங்குள்ள சிறப்பு காவல் படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக பொறுப்பு வகித்தார்.தனது கட்டுப்பாட்டில் பணியாற்றிய பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கின் தொடர்பில், கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள செந்தில்குமாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Advertisement
அப்போது விசாரணைக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது, செந்தில்குமாரின் மனைவி பள்ளிக்கல்வி வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு தனிப்பட்ட வருமானம் எதுவும் இல்லை. ரெட்டியார்பட்டியில் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் மட்டுமே குடும்பத்துக்கு சொந்தமாக உள்ளது. செந்தில்குமாரின் முக்கிய சட்டப்பூர்வ வருமானமாக அரசு ஊதியம் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.மேலும், 2022 அக்டோபர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை அவரின் வருமானம், குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டுக்கடன் திருப்பிச் செலுத்திய விவரங்கள் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வின் அடிப்படையில், அவரது வருமானத்தை விட ரூ.1.28 கோடி மதிப்பில் கூடுதல் சொத்துகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு