Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ரூ.40 லட்சம் வழங்கினால் உங்கள் பெயரில் அரசு பஸ்: கேரள போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்

ரூ.40 லட்சம் வழங்கினால் உங்கள் பெயரில் அரசு பஸ்: கேரள போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்
நஷ்டத்தில் செயல்பட்டு வரும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தை மீட்டெடுக்கவும், புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நிதியை திரட்டவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.40 லட்சம் வழங்குபவரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் அரசு பேருந்து இயக்கப்பட உள்ளது.கேரள அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேருந்துகளை இயக்காமல் இருப்பதே லாபகரமாக இருக்கும் அளவுக்கு அதன் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கான இலவச பேருந்து சேவை அமலுக்கு வந்துள்ளதால், ஆண்டுக்கு கூடுதலாக ரூ.800 கோடி வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோழிக்கோடு நகர சர்வீஸ் கூட்டுறவு வங்கி, புதிய பேருந்து வாங்குவதற்காக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் நன்கொடையாக வழங்கியது.இதனைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தங்களது பொது நிதியில் இருந்து புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளன.கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிறரிடமிருந்து பெறப்படும் நன்கொடை மூலம் ரூ.800 கோடி செலவில் 2,000 புதிய பேருந்துகளை வாங்க கேரள அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
இந்த பேருந்துகள் நிதியுதவி வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் பெயர்களில் இயக்கப்பட உள்ளன.மேலும், புதிய பேருந்து வாங்குவதற்காக ரூ.40 லட்சம் வழங்கும் தனிநபர்களின் பெயரிலும், அவர்களின் புகைப்படத்துடனும் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு