Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: 11 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வந்த மழைக்கால கூட்டத்தொடர் அமளி, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவடைந்தது.கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தொடரில், டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம், ராமர் கோவில் அறக்கட்டளை நன்கொடையில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பலமுறை கடும் அமளி ஏற்பட்டதுடன், அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியபோதிலும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.இந்த கூட்டத்தொடரில் சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு திருத்த மசோதா, தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா, பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இந்தியப் புள்ளிவிவரக் கழக மசோதாவைத் தவிர, மீதமுள்ள 11 மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தொடரின் இறுதியில் உறுப்பினர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினர். இதையடுத்து மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் அவையில் இருந்தார்.கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இரு அவைகளிலும் ஏற்பட்ட தொடர் இடையூறுகள் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பெரிதும் பாதித்ததாக தெரிவித்தார். பணிகளை நிறைவேற்றிய அளவில் இந்த கூட்டத்தொடர் மிகவும் வெற்றிகரமானதாக இருந்ததாகவும், மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Advertisement
அதேநேரத்தில் விவாதம் மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டத்தொடர் வெற்றிகரமாக அமையவில்லை என்றும் குறிப்பிட்டார். ஒதுக்கப்பட்ட நேரத்துடன் ஒப்பிடும்போது, மக்களவையின் செயல்பாடு 19 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், அவ்வப்போது அவர்கள் வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும், சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்றனர். இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் ஒரே ஒரு மசோதா மீது மட்டுமே முழுமையான விவாதம் நடைபெற்றது. தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுப்பது மற்றும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு