யூனியன் பிரதேசங்களை வலுப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்: அமித்ஷா
புதுச்சேரி:யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்கும், அவற்றை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.புதுச்சேரி போலீசாரின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் வண்ண விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதாகவே இருந்து வருகிறது என்றார். புதுச்சேரிக்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், யூனியன் பிரதேசங்களை வலுப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருவதாக அமித்ஷா தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டபோது, மக்களுக்கு சேவை செய்வதில் புதுச்சேரி போலீசார் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.அந்த இக்கட்டான காலகட்டத்தில் புதுச்சேரி போலீசார் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் பணியாற்றியதாகவும் அமித்ஷா பாராட்டினார்.மேலும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக கடந்த 12 ஆண்டுகளில் ரூ.13,762 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.