மாவீரர் அழகுமுத்துகோன் நினைவு தினம்: வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் – டிடிவி தினகரன்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரத்துடன் போராடி, மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்த சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரர் அழகுமுத்துகோனின் நினைவு தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அஞ்சாமையை அடையாளமாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளுக்கு சவாலாக விளங்கிய அழகுமுத்துகோன், தாய் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய மாவீரர் எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அவரது வீரத்தையும் தியாகத்தையும் என்றும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.