போராட்ட சூழலால் 'ஜனநாயகன்' ரிலீஸை முழுமையாக கொண்டாட முடியவில்லை: நடிகை ரேச்சல் ரெபேக்கா
'கடைசி விவசாயி', 'குட் நைட்', 'மெய்யழகன்', 'தாய்க்கிழவி' உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகை ரேச்சல் ரெபேக்கா, 'கடைசி விவசாயி' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அவர், படத்தின் வெளியீட்டை ஒட்டி செய்தியாளர்களிடம் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய ரேச்சல் ரெபேக்கா, திரைப்படம் தொடர்பாக பின்னணியில் என்னென்ன பிரச்சினைகள் நடந்தன என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார். தாம் நடித்த எந்தப் படம் வெளியாகும்போதும் இருக்கும் அதே மகிழ்ச்சியே இந்தப் படத்தின் வெளியீட்டின்போதும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், படம் வெளியான காலகட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றதால், அதன் வெற்றியை முழுமையாக கொண்டாடும் மனநிலையில் இருக்க முடியவில்லை என்றும், தனது எண்ணங்கள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையே சுற்றி இருந்ததால், வெளியீட்டு மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்றும் கூறினார்.விஜய் முதல்-அமைச்சராக நடித்த முதல் படம் இதுதானா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும், அந்தப் படத்தில் விஜய் ஒரு நடிகராக மட்டுமே நடித்துள்ளார் என்றும், தாம் இயக்குநர் அல்லாததால் அதுகுறித்து எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.