Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபடக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், காவிரி நீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை என்ற அணுகுமுறை தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமையக்கூடும் என்றும், அந்த முயற்சியில் முதல்-அமைச்சர் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக சட்ட ரீதியாகப் போராடி பெற்றுள்ள தமிழ்நாட்டின் உரிமைகள், பேச்சுவார்த்தை மூலம் பலவீனப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், அது நீதிமன்ற வழக்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் இத்தகைய யோசனைகள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் திமுக அவற்றை உறுதியாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.கூட்டணி அரசியல் காரணங்களால் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதே டெல்டா பகுதி விவசாயிகளின் ஒருமித்த கருத்து என்றும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், விவசாய சங்கங்களுடனான ஆலோசனையையும் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதேநேரத்தில், பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு