புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரியின் 16-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மே 13-ஆம் தேதி ரங்கசாமி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதையடுத்து 2 கட்டங்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அன்பழகன் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 5-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவது தொடர்பாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி புதுவை சட்டசபையில் இருந்து கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் ஜூலை 2-ஆம் தேதி சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த கோப்பு தற்போதுகவர்னரின்பரிசீலனையில்உள்ளது.இதுவரைஅனுமதிவழங்கப்படவில்லை.இதனிடையே, புதுச்சேரியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அமலில் உள்ள இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சட்டசபையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதற்கான நடவடிக்கையாக, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் 16-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடக்க நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.சட்டமன்றத்திற்கு வருகை தந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.