Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

நீட் விவகாரம்: மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்

நீட் விவகாரம்: மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்
நீட் தேர்வு தொடர்பான சர்ச்சையை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ஆம் தேதி அந்தக் கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இதில் பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். பேரணியை தடுக்க பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். இருப்பினும், கூட்டம் அதிகரித்ததால் தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு பதிலாக போலீசார் மீது கல்வீச்சு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.போலீசாரின் தடியடியில் காயமடைந்த பலர் நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கை நாடு முழுவதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்துள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், மாணவர் போராட்டத்திற்கும், அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கும் எதிராக அரசியல், திரைப்படம் மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.'பரியேறும் பெருமாள்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜும் தற்போது தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், "அதிகார அடக்குமுறைக்கு எதிராக எந்த திசையிலிருந்து குரல் எழுந்தாலும், அந்தக் குரலுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்று உறுதியாக நம்புகிறேன். நீட் என்ற ஆணவப் போக்கிற்கு எதிராக போராடும் அனைத்து இந்திய மாணவர்களுடனும் கைகோர்த்து நிற்கிறேன்"என்று தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு